ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (19:09 IST)

நாடாளுமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் காங்., போட்டி?

கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த காங்கிரஸ்  மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் 2024  நாடாளுமன்றத் தேர்தலில் 15 தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு  இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதற்காக கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் 2024 தேர்தலில் 15 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விருப்பம் தெரிவித்து, கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்த காங்கிரஸ்  மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்ருள்ள நிலையில், இம்முறை 10 தொகுதிகளுக்கு மேல் கேட்டுப்பெற காங்., மாவட்ட தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.