ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 25 நவம்பர் 2023 (16:56 IST)

எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால்- கே.சி.பழனிசாமி

kc palanisamy
திமுகவிற்கு மாற்று பாஜக என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது அதை தகர்த்து திமுகவிற்கு மாற்று அதிமுக அதிமுகவிற்கு மாற்று திமுக மற்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று அதிமுக முன்னாள் எம்பி கே.சி. பழனிசாமி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

''திமுகவை வளர்த்தது எம்ஜிஆர். திமுகவில் இருந்து வெளியேறி தனி கட்சி துவங்கி தமிழகத்தில் #திமுக VS #அதிமுக என்று இருதுருவ அரசியலை கட்டமைத்ததும் #எம்ஜிஆர் .இதன் மூலம் #திராவிட கலாச்சாரம் வலுப்பெற்றது. ஒருவேளை எம்ஜிஆர் தனிக்கட்சி துவங்காமல் இருந்திருந்தால் தமிழகத்தில் தேசிய கட்சிகள் நுழைந்திருக்கும்.

அதேபோல் நிகழ்காலத்திலும் திமுக VS அதிமுக என்று இருதுருவ அரசியலை தாங்கி பிடிக்க வேண்டும். இதில் அதிமுக பலவீனமாக இருந்தால் பாஜக எனும் மதவாத சக்தி தமிழகத்தில் ஊடுருவிவிடும். இதை தடுக்க அதிமுக வலிமையாக இருப்பது மிக அவசியம்.

நங்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை எதிர்க்கிறோம் என்பது உதட்டளவில் மட்டும் இல்லாமல் செயலளவில் கடுமையாக அதிமுக பாஜகவை எதிர்த்து களமிறங்க வேண்டும். இன்றைய ஆபத்து திமுகவிற்கு மாற்று பாஜக என்ற கட்டமைப்பு உருவாக்கப்படுவது அதை தகர்த்து திமுகவிற்கு மாற்று அதிமுக அதிமுகவிற்கு மாற்று திமுக மற்ற கட்சிகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் ''என்று தெரிவித்துள்ளார்.