புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (14:28 IST)

டிடிவி தினகரனுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ ஆதரவு: அதிகரிக்கும் எண்ணிக்கை

டிடிவி தினகரனுக்கு திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் தற்போது ஆதரவு தெரிவித்துள்ளார்.


 

 
ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்ததை தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை அதிமுக கட்சியில் நீக்க முடிவு செய்தனர். இந்நிலையில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியை கைப்பற்ற போராடி வருகிறார்.
 
19 எம்.எல்.ஏ.க்கள் முதலில் தினகரன் அணியில் சேர்ந்தனர். இதனால் எடப்படி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை இழந்துள்ளார். இதையடுத்து நேற்று இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தனர். தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ. தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தினகரன் அணியின் எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது.
 
தற்போது தினகரன் அணியில் இணைந்துள்ள திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ், மேலும் பலர் தினகரன் அணியில் இணைய தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.