1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2017 (11:16 IST)

அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க திமுக-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா?

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசை மெஜாரிட்டி நிரூபிக்க கவர்னர் உத்தரவிடாவிட்டால் திமுக அதிரடி நடவடிக்கை எடுக்கும் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்ரன.



 
 
இதன்படி அதிமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்க  ஒட்டுமொத்தமாக அனைத்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து திமுக தரப்பில் ஒருவர் கூறியபோது, ''எடப்படி அரசு, தி.மு.க தரப்பு எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்து, அவர்களது மெஜாரிட்டையை நிருபிக்க முடிவு செய்தால், நாங்கள் அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்று தடை வாங்குவோம். இல்லையென்றால் ஒட்டுமொத்தமாக நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்துவிடுவோம். 
 
தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் அனைவருமே ராஜினாமா செய்தால் என்ன செய்வார்கள்? அதுபற்றியெல்லாம் நாங்கள் யோசித்துக் கொண்டுதான் இருக்கிறோம்" என்கிறார்கள்.