வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By cauveri manickam
Last Modified: சனி, 26 ஆகஸ்ட் 2017 (17:57 IST)

இரண்டு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் ஸ்வீட் ஸ்டால் நடிகை

முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாவதால், தன்னுடைய சம்பளத்தை உயர்த்திவிட்டார் ஸ்வீட் ஸ்டால் நடிகை என்கிறார்கள்.



 
‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள’ சினிமாக்காரர்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்? அதிலும் நடிகைகள் ரொம்பவே விவரமானவர்கள். ஸ்வீட் ஸ்டால் நடிகையும் அப்படித்தான். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெற்றிக்கொடி நாட்டிவரும் அவர், தன்னுடைய சம்பளத்தை திடீரென உயர்த்தியிருக்கிறார்.

காரணம், சில வாரங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான தெலுங்குப் படம் சூப்பர் ஹிட். இரண்டு நாட்களுக்கு முன்பு தலயுடன் நடித்த படமும் தமிழில் ரிலீஸாகியிருக்கிறது. அடுத்ததாக, தளபதியுடன் நடித்த படம் தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. இப்படி அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்த படங்கள் ரிலீஸாவதால், ஒன்றரை கோடியில் இருந்து இரண்டு கோடியாக தன் சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்கிறார்கள்.