அடிக்கல் நட்டு அஞ்சு வருஷம் ஆச்சு..! – எய்ம்ஸ் குறித்து பிரதமருக்கு நினைவூட்டல் கடிதம்!
மதுரையில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாமல் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை தொடங்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் ஐந்து வருடங்கள் முன்னதாக பிரதமர் மோடி மதுரையில் அடிக்கல் நாட்டினார். அடிக்கல் நட்டு வைத்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில் இன்னும் எய்மஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.
இதை குறிப்பிட்டு சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.