தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் சில மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததால் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு 7ம் தேதியுடன் முடியும் நிலையில் அடுத்த 14ம் தேதி வரை கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத மாவட்டங்களுக்கு மட்டும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொரோனா பாதிப்புகள் அதிகமுள்ள கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி.
நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!
ஜூன் 14 வரை போக்குவரத்து தடை நீடிக்கும். டாஸ்மாக், சலூர், தேநீர்கடைகளுக்கும் அனுமதி இல்லை
ஏற்றுமதி நிறுவனங்கள் 10% பணியாளர்களுடன் இயங்கலாம்!
தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்
சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் நிலையங்கள் செயல்பட அனுமதி!
வாடகை கார்களில் 3 பயணிகள், ஆட்டோக்களில் 2 பயணிகள் மட்டுமே செல்ல அனுமதி!
ஊரடங்கு காலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதி!
மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Motor Technicians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.
ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் இறைச்சிக்கடைகள், பழக்கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதி!
ஜூன் 7 முதல் 14 வரையிலான ஊரடங்கு காலத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் செயல்பட அனுமதி!