திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 7 மே 2021 (09:58 IST)

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்... முதலமைச்சரானார் மு.க.ஸ்டாலின்!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்றார். 
 
ஆளுநர் மாளிகையில் முக ஸ்டாலினுக்கு ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  விழாவில் பேசிய முக ஸ்டாலின், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசியலமைப்பின் பால்  உண்மையான நம்பிக்கையும் மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். 
 
இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும் ஒருமையும் நிலைநிறுத்துவேன் என்றும் தமிழ்நாடு அரசு முதலமைச்சராக உண்மையாகவும் உளச்சான்றின் படியும் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் அரசியமைப்பிற்கும் சட்டத்திற்கும் இணங்க அச்சமும் ஒருதலைசார்ப்பும் இன்றி விருப்பு வெறுப்பை விளக்கி பலதரப்பட்ட மக்களுக்கு நேர்மையானதை செய்வேன் என்றும் உளமார உறுதிமொழிகிறேன். என்று முதலமைச்சராக பதிவியேற்றர்.