பதவியேற்கும் மு.க.ஸ்டாலின்; புதிய அத்தியாயம் தொடக்கம்! – ட்ரெண்டாகும் ஹேஷ்டேகுகள்!
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும் நிலையில் இன்று அது தொடர்பான ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் இன்று முதலமைச்சராக முதன்முறையாக பதவியேற்கிறார். பதவியேற்பு முடிந்து சென்னை கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மரியாதை செலுத்த உள்ளார்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பதை கொண்டாடும் விதமாக பலர் ட்விட்டரில் #ChiefMinisterMKStalin , #MKStalinEraBegins போன்ற ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.