திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (11:56 IST)

பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது? ஸ்டாலின் இன்று ஆலோசனை!

பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அனைத்து துறை உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை. 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள். இதனிடையே புதுச்சேரில் இன்று திறக்கப்பட இருந்த பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பள்ளி, கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து அனைத்து துறை உயரதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதன் முடிவுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என்று தெரிகிறது.