1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin take actions for Remdesivir distribution

அனைத்து மருத்துவமனைகளுக்கும் ரெம்டெசிவிர் மருந்து! – முதல்வர் நடவடிக்கை!

Tamilnadu
தமிழகத்தில் கொரோனா காரணமாக ரெம்டெசிவிர் மருந்திற்கு மக்கள் குவியும் நிலையில் நேரடியாக மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிரை அனுப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பல்வேறு முக்கிய நகரங்களின் அரசு மருத்துவமனைகளில் ரெம்டெசிவிரை விற்க ஏற்பாடு செய்தது.

இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அலைமோதுவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்துகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கவும் அங்கிருந்து நோயாளிகளுக்கு எளிதில் கிடைக்க பெறவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
ரெம்டெசிவிர் மருந்தை சமூக வலைத்தளம் மூலம் விற்க முயன்ற மூவர் கைது!