தொடர்புடைய செய்திகள்
- கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட திருத்தம்; எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடியார் – அதிமுக வெளிநடப்பு!
- ''இரவின் நிழலில் ''பிறந்த நாள் கொண்டாடிய ஏ.ஆர்.ரஹ்மான் !
- விஜய்- அஜித் புகைப்படத்தை பகிர்ந்த வெங்கட்பிரபு
- ''மாநாடு'' பட ரீமேக் உரிமையைப் பெற்ற சிவகார்த்திகேயன் பட தயாரிப்பாளர்
- பிரதமர் நரேந்திர மோடி நீண்டகாலம் வாழ பிரார்த்தனை!
திமுகவினரே தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன்! – மு.க.ஸ்டாலின் உறுதி!
திமுகவினர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு, முன்னாள் அமைச்சர் மோசடி வழக்கில் கைது போன்ற சம்பவங்கள் தொடர்பாக, திமுகவினர் காழ்ப்புணர்ச்சியோடு இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சட்டமன்றத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “தமிழகத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடந்து வருகிறது. திமுகவை சேர்ந்தவர்கள் யார் தவறு செய்தாலும், ஒரு சிறிய குற்றத்தில் ஈடுபட்டாலும், அண்ணா மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக சொல்கிறேன் இந்த ஸ்டாலின் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
