செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 ஜனவரி 2022 (11:21 IST)

கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட திருத்தம்; எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடியார் – அதிமுக வெளிநடப்பு!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவு சங்க சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது.

தமிழக கூட்டுறவு சங்கங்களில் நிர்வாகிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இந்நிலையில் அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை குறைக்கும் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவி காலம் 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கப்படுகிறது. இதனால் அதிமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறும் சூழல் உள்ளது. இதற்கான மசோதாவை இன்று சட்டசபையில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். இதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர்.