கருணாநிதி சிலை திறப்பிற்கு குடியரசு தலைவர் வருகை? – மு.க.ஸ்டாலின் தகவல்!

Prasanth Karthick| Last Modified திங்கள், 19 ஜூலை 2021 (13:26 IST)
இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி சிலை திறப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சென்று நேரில் சந்தித்தார். முதல்வராக பதவியேற்றபின் முதன்முறையாக இன்று குடியரசு தலைவரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் மு.க.ஸ்டாலின்.

அப்போது தமிழக சட்டமன்றத்தில் கலைஞர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :