புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 2 ஜூன் 2021 (08:35 IST)

மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் டீசல் விலை! – இன்றைய நிலவரம்!

சமீப நாட்களாக தொடர்ந்து விலையேற்றம் கண்டு புதிய உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று மாற்றமின்றி விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் கடந்த மாதம் தேர்தல் சமயத்தில் ஒரே விலையில் விற்று வந்த பெட்ரோல், டீசல் விலை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு வேகமாக அதிகரிக்க தொடங்கியது.

கடந்த மாதத்தில் மட்டும் தொடர்ந்து 15 முறை விலை ஏற்றம் அடைந்த பெட்ரோல், டீசல் விலை நேற்றைய நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் 95.99 ரூபாய்க்கும், டீசல் 90.12 ரூபாய்க்கும் விற்பனையாகியது. இந்நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகி வருகிறது.