ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 6 மே 2021 (17:26 IST)

மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பட்டியல் !

கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே பலத்த போட்டிகள் காணப்பட்டது

இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 150க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றது. திமுக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின்  கொளத்தூர் தொகுதியில் போட்யிட்டு 3 ஆம் முறை  வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களைச் சந்தித்து ஆட்சிமை அமைக்க உரிமைகோரினார் ஸ்டாலின்.

எனவே நேற்று மதியமே ஆட்சியமைக்குமாறு ஸ்டாலிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்., எனவே நாளை ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் திமுக தலைவர் ஸ்டார் முதல்வராகப் பதவியேற்கிறார்.இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான 33 அமைச்சர்களைக் கொண்ட பட்டியல் தற்போடு வெளியாகியுள்ளது. நாளை மு.க,.ஸ்டாலினுடன் அவர்களும் பதவியேற்க வுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் – பொது,பொதுநிர்வாகம், இந்திய ஆட்சிப் பணி, காவல் உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கம், மற்றும்திறனாளிகள் நலன்.

மற்ற அமைச்சர்களுக்கான பட்டியல் விவரம்:

துரைமுருகந் நீர்வளத்துறை

கே.என்.நேரு- நகர்ப்புற வளர்ச்சித்துறை

இ . பெரியசாமி – கூட்டுறவுத்துறை

க.பொன்முடி- உயர்கல்வித்துறை

எ.வ.வேலு- பொதுப்பணித்துறை

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்- வேளாண்மைத்துறை

கே.கே.எஸ்.எஸ். ஆர் ,ராமச்சந்திரன்- வருவாய்

தங்கம் தென்னரசு – தொழில்துறை


எஸ்.ரகுபதி- சட்டத்துறை

சு. முத்துசாமி – வீட்டு வசதித்துறை

கே.ஆர். பெரியகருப்பன்-  ஊரக வளர்ச்சித்துறை

தா.மோ. அன்பரசந் ஊரகத் தொழில்துறை

மு.பெ.சாமிநாதந் செய்தித்துறை

கீதா ஜீவந் சமூக நலந் மகளிர் உரிமைத்துறை

அனிதா ராதாகிருஷ்ணன்

மீன்வளத்துறை – கால்நடை பராமரிப்புத்துறை

ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் போக்குவரத்துறை

கா.ராமச்சந்திரன் -வனத்துறை

அர.சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை

வி.செந்தில் பாலாஜி- மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை

ஆர்.காந்தி – கைத்தறி துணிநூல் துறை

மா.சுப்பிரமணியன்- மருத்துவம் மக்கள் நலவாழ்வுத்துறை

பி.மூர்த்தி- வணிகவரி பதிவுத்துறை

எஸ்.எஸ். சிவசங்கர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

பி.கே. சேகர்பாபு- இந்து சமயம் அறநிலையத்துறை

பழனிவேல் தியாகராஜந் நிதி மனிதவள மேலாண்மைத்துறை

சா.மு நாசர் வால்வளத்துறை

செஞ்சி கே.எஸ். மஸ்தன் சிறுபான்மை வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை

அன்பில் மகேஷ் பொய்யாமொழி – பள்ளிக்கல்வித்துறை

சிவ.வீ மெய்யநாதந் சுற்றுச்சூழல், இளைஞர் நலன்,

சி.வி.கணேசன் தொழிலாளர் நலன்,திறன் மேம்பாடு

மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பம்

 மா- மதிவேந்தன் சுற்றுலாத்துறை

கயல்விழு செல்வராஜ் – ஆதிதிரவிடர் நலத்துறை