இயக்குனரை மொய்க்கும் தயாரிப்பாளர்கள்… காரணம் ரஜினிதான்!
இயக்குனர் தேசிங் பெரியசாமிதான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போகிறார் என்பதால் அவரை இழுக்க தயாரிப்பாளர்கள் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா கதாநாயகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தேசிங் பெரியசாமி. அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினியே அவரை அழைத்து எனக்கும் ஏதாவது கதை யோசிங்க எனக் கூறிய ஆடியோ கூட வெளியானது. இந்நிலையில் அவர் ரஜினிக்கு சொன்ன கதை பிடித்து போகவே அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளை செய்து வருகிறாராம்.
ரஜினிஹின் அடுத்த இயக்குனர் அவர்தான் என்பதால் எப்படியாவது அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனராம். சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூட ரஜினி படத்தை தங்கள் நிறுவனத்துக்கே இயக்கித் தர கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் திரைக்கதை அமைத்து முடித்துவிட்டு ரஜினியின் கலந்தாலோசித்து சொல்வதாக அவர் கூறியுள்ளாராம்.