செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 6 மே 2021 (15:03 IST)

முதலமைச்சரானதும் முதல் கையெழுத்து இதுதானா? – முக்கியமான திட்டங்கள் என தகவல்!

நாளை தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் முதன்முதலாக பதவியேற்க உள்ள நிலையில் முதலாவதாக எந்த கோப்புகளில் கையெழுத்திட உள்ளார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில் நாளை மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ளார். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக உள்ள நிலையில் புதிய முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் முதல்வராக பதவியேற்கும் முதல் நாளில் மு.க.ஸ்டாலின் சில முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட உள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது. அதில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டம், நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி உள்ளிட்ட திட்ட்ங்களுக்கு அன்றைய தின கையெழுத்திடுவார் என பேசிக் கொள்ளப்படுகிறது.