1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin going down in kolathur area

7வது சுற்றிலும் முக ஸ்டாலின் பின்னடைவு!.. திமுகவினர் ஷாக்!..

stalin
தமிழகத்தில் நடந்த முடிந்த சட்டமன்ற தேர்தலில் பதிவாக வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. துவக்கத்தில் தபால் ஓட்டுகளில் திமுக முன்னிலையில் இருந்தது. ஆனால் ஒரு கட்டத்தில் முதலிடத்திலும், இரண்டாம் இடத்திற்கு அதிமுகவும், 3ம் இடத்திற்கு திமுகவும் சென்றது.

தற்போது 234 தொகுதிகளிலும் வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்துவிட்ட நிலையில் 104 தொகுதிகளில் தவெகவும், 68 தொகுதிகளில் அதிமுகவும், 62 தொகுதிகளில் திமுகவும் முன்னிலையில் இருக்கிறது.

ஒருபக்கம், திமுக வேட்பாளர்கள் பலரும் பின்னடவை சந்தித்துள்ளனர். திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக திமுக தலைவர் மற்றும் முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்திருக்கிறார். 7வது சுற்றில் 5500 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பின் தங்கியிருக்கிறார். மொத்தமாக 27,105 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் பின் தங்கியிருக்கிறார். அந்த தொகுதியில் தவெக வேட்பாளர் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
விஜய் ஆட்சியமைக்க அதிமுக ஆதரவு கொடுக்காது.. தவெகவுக்கு ஷாக் கொடுத்த பொன்னையன்...