புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (14:27 IST)

நன்றி சொன்ன ஸ்டாலின்; கலாய்த்து விட்ட நெட்டிசன்கள்!

பேரணியில் பங்கேற்ற 10 ஆயிரம் காவலர்களுக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலினை இணையவாசிகள் கலயத்து வருகின்றனர். 
 
சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தத்தை அமல்படுத்திய மத்திய அரசு. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இன்று இந்த மசோதாவுக்கு எதிராக திமுக கூட்டணி பேரணியை நடந்தது.   
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த பேரணியில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா,  எல்.பி.எஃப், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள்,  உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.  
 
இந்த பேரணிக்கு சுமார் 5000 போலீஸார்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளது. மதச்சார்பற்ற இந்தியாவை இந்து தேசமாக மாற்றாதே! குடியுரிமை சட்டம் குழிபறிக்கும் சட்டம்! ஆகிய முழக்கங்களுடன் திமுக மற்றும் தோழமைக்கட்சிகள் பேரணி நடத்தினர். 
 
இதன் பிறகு மேடையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், இங்கே நடந்தது பேரணி அல்ல போர் அணி. குடியுரிமை சட்டத்தை வாபஸ் வாங்கும் வரையில் போராட்டம் நடைபெறும். இந்த பேரணிக்கு விளம்பரப்படுத்திய அதிமுகவுக்கு நன்றி என தெரிவித்தார். 
 
இதனோடு பேரணியில் பங்கேற்ற 10 ஆயிரம் காவலர்களுக்கு எனது நன்றி. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தங்களது இந்த காவலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். 
 
ஆனால், இணையவாசிகளோ அது பாதுகாப்பிற்காக வந்த காவலர்கள் தான் பேரணிக்காக வந்தவர்கள் என தெரிவித்து கலாய்த்து வருகின்றனர்.