செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2020 (16:18 IST)

ஒரிஜினல் சங்கி ஸ்டாலின்: நொந்து நூடுல்ஸ் ஆகும் திமுகவினர்!

திமுக தலைவர் முக ஸ்டாலின்

ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் காலை முதல் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. 
 
வரும் தேர்தலில் ஐபேக் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோரின்  நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதை முக ஸ்டாலின் தனது டுவிட்டரில் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து திமுக மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  
 
50 ஆண்டுகளுக்கும் மேல் கட்சி நடத்தி வரும் ஒரு கட்சிக்கு ஆலோசனை செய்ய ஒருவர் தேவை என்றால் ஆளுமையுள்ள தலைவர், முடிவெடுக்கும் தலைவர் அந்த கட்சியில் இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இதோடு நிறுத்தாமல் காலை முதல் #ஒரிஜினல்சங்கி_ஸ்டாலின் என்ற ஹேஷ்கேக்கை சமூக வலைத்தளமான டிவிட்டரில் டிரெண்டாக்கி வருகின்றனர். இது திமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.