1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. H raja appreciate DMK alliance singnature protest

திமுகவின் திட்டத்தை வரவேற்கிறேன்! எதுக்கு தெரியுமா…? – எச்.ராஜா ட்வீட்!

Tamilnadu
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை வரவேற்பதாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி மற்றும் என்பிஆர் போன்றவற்றிற்கு எதிராக தமிழகத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளன. இதன்மூலம் பெறப்படும் கையழுத்துகளை குடியரசு தலைவருக்கு அனுப்பி முறையிட போவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்கட்சிகளின் இந்த கையெழுத்து இயக்கத்தை வரவேற்பதாக தமிழக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ட்விட்டரில் ” சிஏஏ விற்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் சேர்ந்து கையொப்பம் இடுபவர்களது பெயர் வெளிவரும் போது நாட்டின் எதிரிகள் யார் என்பது வெளிப்பட்டு விடும். அதுவும் நல்லது தானே. எனவே அதை நான் வரவேற்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அதிமுகவை வெட்டி விட ஸ்கெட்ச்? கூட்டணியில் வெடி வைக்க காத்திருக்கும் பிரேமலதா