திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2020 (15:41 IST)

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சாகும் வரை ஆயுள் தண்டனை என தீர்ப்பு

சென்னை மாற்றுத் தி
 
றனாளி சிறுமி பாலியல் வழக்கில் இன்று போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளான 17 பேரில் ஒருவர் சிறையில் இறந்துப்போன நிலையிலும், ஒருவர் விடுவிக்கப்பட நிலையில் மற்ற 15 பேருக்கு போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன் படி, இதில் ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ஒருவருக்கு ஆயுள் தண்டனையும்  வழங்கப்பட்டுள்ளது. மற்ற 9 பேருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு நீதிபதி மஞ்சுளா தீர்ப்பு அளித்துள்ளார்.