செவ்வாய், 21 மார்ச் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified சனி, 3 செப்டம்பர் 2022 (14:23 IST)

சொத்துவரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

corporation
சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாதத்திற்குள் செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியில் தொழில் செய்யும் தொழிலதிபர்கள் சொத்துவரி மற்றும் தொழில் வரியை இந்த மாத இறுதிக்குள் கட்ட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது 
 
சொத்து வரி செலுத்தாமல் இருந்து வரும் சொத்தின் உரிமையாளர்கள் மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தொழில் வரியை செலுத்தாதவர்களுக்கு இந்த மாதம் வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது 
 
இந்த மாதத்திற்குள் சொத்து வரி, தொழில் வரி செலுத்தாவிட்டால் அவர்கள் மீது அபராத நடவடிக்கை உள்பட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ்க்கு விளக்கம் அளிக்காமல் இருக்கும் சொத்துக்கள் சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.