தொடர்புடைய செய்திகள்
- அடுத்த சீசனிலும் “தல” தோனிதான் கேப்டன்! – சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!
- சினிமா பைனான்சியர் கொடூர கொலை; ஒருவர் கைது! – சென்னையை உலுக்கிய சம்பவம்!
- சென்னை தொழிலதிபர் கொலை: பாலியல் தரகர் கைது!
- தொழிலதிபரை கொன்று பிளாஸ்டிக் கவரில் வீசிச் சென்ற மர்ம நபர்கள்!
- சொத்துவரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
சென்னையில் வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு முகாம்: பொதுமக்கள் ஆர்வம்!
சென்னையில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த முகாமில் கலந்து வருகின்றனர்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளிலும் இன்று வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம்கள் நடைபெற்று வருகிறது
இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து தொகுதிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் இதில் பொதுமக்கள் தாமாக முன்வந்து தற்போது வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க ஆர்வத்துடன் வரிசையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த முகாமில் மட்டுமின்றி இணையதளம் மூலமாகவும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
