வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (08:38 IST)

சென்னை தொழிலதிபர் கொலை: பாலியல் தரகர் கைது!

arrest
சென்னை  ஆதம்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் கொலை வழக்கில் பாலியல் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
 
சென்னை ஆதம்பாக்கத்தில் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் என்பவர் நேற்று மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு பிளாஸ்டிக் கவரில் சாலை ஓரம் வீசி எறியப்பட்டது.
 
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சியின் மூலம் விசாரணையை தொடங்கினர்
 
இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கத்தில் சேர்ந்த தொழிலதிபர் பாஸ்கரன் கொலை வழக்கில் பாலியல் தரகர் கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் மேலும் சில குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.