1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin comments on Edappadi Palanisamy

மூழ்கிய பயிரை பிடுங்கி முகர்ந்து பார்த்தால் போதுமா? ஸ்டாலின் கேள்வி!

Cyclone Nivar
நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல். 
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வந்த நிவர் புயல் தமிழகம் முழுவதும் பாதிப்புகளை ஏஏபடுத்திய நிலையில், பாதிப்பு நிலவரத்தை நேரில் சென்று கண்டுவந்தார். இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின்,
 
மூழ்கிய பயிரை பிடுங்கி முகர்ந்து பார்த்தால், நிவாரணம் வந்து சேர்ந்துவிட்டதாக நிம்மதி கொள்வார்களா? நிவர் புயல் பாதிப்பு நிவாரணமாக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். புயல் நிவாரணமாக ரூ.74 கோடியை விடுவித்த அரசு அதை யாருக்கு கொடுத்தது என வெளிப்படையாக தெரியவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
அடுத்த கட்டுரையில்
நாயை காரில் கட்டி இழுத்துச் சென்ற நபர் கைது !