1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. MK Stalin tweet for Bharathi birthday

வாழ்த்து பாடும் கேப்பில் அட்டாக் செய்யும் ஸ்டாலின்! – பாரதியார் பிறந்தநாள் ட்வீட்!

Tamilnadu
இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் வாழ்த்து ட்வீட்டில் கேப்பில் ஆளும் கட்சியையும் விமர்சித்து ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் கவிஞரும், சுதந்திர போராட்ட தியாகியுமான பாரதியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளுக்காக தமிழ் உணர்வாளர்கள், அரசியல் பிரமுகர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அமித்ஷா உள்ளிட்ட தேசிய தலைவர்களும் பாரதியார் பிறந்த நாளில் வணக்கம் செலுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

பாரதியார் பிறந்தநாள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின் “'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே' என்ற மகாகவி பாரதியின் இல்லத்தை அரசு இல்லமாக்கி - சென்னையில் சிலை வைத்து சிறப்பித்தது திமுக அரசு. அவரது பிறந்தநாளில் 'என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்' என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது. வாழ்க பாரதி புகழ்!” என பதிவிட்டுள்ளார்.

பாரதியாரை வாழ்த்தும் கேப்பில் பாரதியார் வரிகளை கொண்டு ஆளும் கட்சியை பூடகமாக ஸ்டாலின் சுட்டிக்காட்டி பேசுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
முக ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி!