வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (10:34 IST)

இனி உங்களுக்கு "அதிமுக" என்ற பெயர் எதற்கு? ஸ்டாலின் சரமாரி கேள்வி

பாஜக - ஆர்.எஸ்.எஸ் கொள்கையை பின்பற்றுவதற்கு மறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்ற பெயர் உங்களுக்கு எதற்கு? என ஸ்டாலின் கேட்டுள்ளார். 
 
முத்தலாக் மசோதாவை அதிமுக ஆதரித்துள்ளதால் ஸ்டாலின் கடும் கண்டனங்களை முனைத்துள்ளார். ஸ்டாலின் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு... 
 
கடந்த முறை முத்தலாக் மசோதாவை "இது பாஜக-வின் கம்யூனல் அஜெண்டா என்று தாக்கினார் அதிமுகவின் பாரளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா. ஆனால் இன்றைக்கு தன் பதவியைத் தக்க வைக்க முதல்வர் பழனிச்சாமியும், தனது மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவி பெற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் அதிமுகவையும் அதிமுக அரசையும் பாஜக-விடம் குத்தகைக்கு விட்டு முத்தலாக் மசோதாவை ஆதரித்திருக்கின்றனர். 
பாஜக-வின் மறு பதிப்பாகவே அதிமுக மாறியிருக்கிறது. சிறுபான்மையினர் நலன், மாநிலத்தின் உரிமைகள் என எல்லாவற்றையும் விட்டு விட்டு, பாஜக - ஆர்எஸ்எஸ் கொள்கையே எங்கள் கொள்கை என்று செயல்படுவதற்கு மறைந்த மக்கள்திலகம் எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக என்ற பெயர் எதற்கு? 
 
தமிழக மக்களை ஏமாற்றும் இந்த இரட்டையரின் கபட வேடங்களைப் பார்த்தால் "இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்று, எம்ஜிஆர் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது என்று விமர்சித்துள்ளார்.