வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (08:38 IST)

செல்பியுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முக ஸ்டாலின்

வேலூர் மக்களவை தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ம் தேதி மக்களவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அதிமுக, திமுக உள்பட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாகி உள்ளன. இந்த நிலையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இன்று முதல் திமுக தலைவர் முக ஸ்டாலின் களமிறங்கியுள்ளார் 
 
வேலூர் உழவர் சந்தையில் இன்று நடைப்பயணம் மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருடன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் செல்பி எடுத்துக்கொண்டனர். இன்றைய நாள் செல்பி உடன் அவர் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  வேலூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று முதல் மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்வார் என்றும் அவருடன் துரைமுருகன், பொன்முடி மற்றும் வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் உடன் இருப்பார்கள் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
வேலூர் மக்களவைத் தேர்தலில் ஏற்கனவே அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான ஏசி சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் தேர்தல் செய்துவரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். அதேபோல் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும் விரைவில் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
அதேபோல் அதேபோல் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது