திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2019 (14:09 IST)

நினைத்ததை சாதித்த பாமக ... என்ன செய்யப்போகிறார் அன்புமணி ராமதாஸ் ?

பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பாமக நிறுவனர் ராமதாஸின் மகன் மற்றும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துகொண்ட பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 1 ராஜ்ய சபா எம்.பி பதவி ஒப்பந்தம் வைத்துக்கொண்டது. அந்த அடிப்படையில் அதிமுக பெருவாரியாக மக்களவைத் தொகுதியில் தோற்றாலும் கூட பாமகவுக்கு 1 ராஜ்ய சபாவை கொடுத்துள்ளது. பாமக சார்பில் அன்புமணிக்காகவே இப்பதவியை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுள்ளதாகவும்  யூகங்கள் பரப்பட்டது.

இந்நிலையில் பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் அதிமுகவை சேர்ந்த 5 மாநில உறுப்பினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் சமீபத்தில் முடிவடைந்தது.

இதனைடயடுத்து மாநிலங்களவைக்கு அதிமுக மற்றும் திமுக ஆகிய இருகட்சிகளின் சார்பில் புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதில் திமுக சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ(நேற்று பதவி ஏற்றுகொண்டார்), சண்முகம் மற்றும் வில்சன் ஆகியோரும் பதவியேற்றனர்.

அதிமுக சார்பில் சந்திரசேகர் மற்றும் மொகமது ஜான் ஆகியோரும் பதவியேற்றனர்.அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தமிழக எம்பிக்கள் அனைவரும் தமிழிலேயே பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில்  இன்று பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி ராமதாஸ் பதவியேற்றுக்கொண்டார்.

இந்நிலையில் அரசியல் காய்களை சாமர்த்தியமாக நகர்த்தி பதவி பீடத்தில் அமர்ந்துள்ள அன்புமணி மக்கள் பிரச்சனைக்காக ஆளுங்கட்சி கூட்டணிக்குள் இருந்தே எவ்விதம் குரல் எழுப்பப் போகிறார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் எழுப்பிவருகின்றனர்.