1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (19:26 IST)

ரஜினி கருத்துக்கு இஸ்லாம் அமைப்பு வரவேற்பு!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை அளித்த பேட்டியில், ‘சிஏஏ சட்டட்தால் இந்திய இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தை அரசியல் கட்சிகள் ஏற்படுத்தி வருகின்றனர் என்றும், உண்மையில் இந்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இருக்காது என்றும், பாகிஸ்தான் பிரிவினையின்போது இதுதான் நமது மண், இதுதான் நமது நாடு என்று முடிவெடுத்த இஸ்லாமியர்களை எப்படி இந்தியா வெளியேற்றும்? என்றும், ஒருசில அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாபத்திற்காக இதனை கையில் எடுத்துள்ளதாகவும், ஒருவேளை இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் ஏதாவது அச்சுறுத்தல் நடந்தால் முதல் ஆளாக நானே குரல் கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினியின் இந்த கருத்துக்கு இஸ்லாம் அமைப்பு ஒன்று வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
மரியாதைக்குரிய திரு.ரஜினிகாந்த்‌ அவர்களுக்கு, ஏக இறைவனின்‌ சாந்தியும்‌, சமாதானமும்‌ தங்கள்‌ மீது நிலவட்டுமாக.
 
இன்று 05.02.2020 பத்திரிக்கையாளர்கள்‌ சந்திப்பில்‌ இந்திய முஸ்லீம்களுக்கு சிஏஏ மற்றும்‌ என்.ஆர்.சி சட்டத்தால்‌ எவ்வித பாதிப்பும்‌ இல்லை என்றும்‌, இந்திய முஸ்லிம்களை வெளியேற்ற நினைத்தால்‌ என்னுடைய குரல்‌ முதலாவதாக இருக்கும்‌ என்றும்‌, நாட்டின் பிரிவினையின்‌ போது இந்த தேசத்திலேயே வாழ்வோம்‌ இங்கேயே மரணிப்போம்‌ என உறுதியான முடிவெடுத்த முஸ்லீம்களை மத்திய அரசு நிச்சயம்‌
வெளியேற்றாது என உறுதிபட கூறிய தங்களின்‌ கருத்துக்கு தமிழக இஸ்லாமியர்கள்‌ சார்பிலும்‌, எங்கள்‌ ஜமாஅத்தின்‌ சார்பிலும்‌ மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்‌ கொள்கிறோம்‌.
 
நீங்கள்‌ பூரண உடல்‌ நலத்துடன்‌ தேசப்‌ பணிகளை தொய்வில்லாமல்‌ மேற்கொள்ள ஏக இறைவனிடம்‌ பிரார்த்திக்கின்றோம்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ரஜினி கருத்துக்கு இஸ்லாம் அமைப்பு வரவேற்பு!