புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (13:22 IST)

முதல்வர் வீட்டு முன்பு தீக்குளிப்பு - உள்ளாட்சி தேர்தல் சிக்கல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு ஒருவர் மண்ணெண்ணெய்யை மேலே ஊற்றி  தீக்குளிப்பில் ஈடுபட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டு முன்பு 40 வயது மதிக்கத்தக்க ஒருவர்  மண்ணெண்ணெய்யை மேலே ஊற்றி  தீக்குளித்தார். இதனை கண்டதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 
 
40% தீக்காயம் ஏற்பட்ட அந்த நபரை ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். போலீஸார் இது குறித்து விசாரணை நடத்திய நிலையில் அவர் மதிமுக பிரமுகர் வெற்றிவேல் என தெரியவந்துள்ளது. 
 
அதோடு உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவில் சீட் மறுக்கப்பட்டதையடுத்து சுயேச்சையாக போட்டியிடும் இவரை  வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுவதாக கூறி தீக்குளித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.