திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஜனவரி 2022 (09:48 IST)

தொலைந்த 46 சவரன் தங்க நகை வாட்ஸ் அப் மூலம் சில மணி நேரங்களில் கண்டுபிடிப்பு!

சென்னையில்  ஒருவர் 46 பவுன் தங்க நகையை தொலைத்த நிலையில் ஒரு சில மணி நேரங்களில் வாட்ஸ்அப் மூலம் அந்த நகையை கண்டுபிடித்த சம்பவம் அரங்கேறியது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
சென்னையில் கடந்த 17ஆம் தேதி ஈவிகே சம்பத் சாலையில் மஹிவால் என்பவர் 46 சவரன் தங்க நகைகளை தொலைத்துவிட்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தது 
 
இந்த நிலையில் நகை எடுத்தவர் நகையை அடகு வைக்க வாய்ப்பு இருப்பதாக கருதிய மஹிவால் நகைக்கடைக்காரர் சங்கத்தை தொடர்பு கொண்டு அவர்களது வாட்ஸ்அப் குழுவில் தகவலை பகிர்ந்துள்ளார்
 
 எதிர்பார்த்தது போலவே புரசைவாக்கத்தில் உள்ள நகைக் கடையில் அடகு வைக்க வந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ய போது அவர் அந்த நகையை கண்டெடுத்ததாக ஒப்புக்கொண்டார்
 
இதன் பின்னர் 365 கிராம் நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் இது குறித்து நான்கு பேரிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன