திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (13:11 IST)

சம்சாரம் இல்லாமல் என்னால் வாழ முடியாது: தங்கம் தென்னரசு பதிலால் சட்டசபையில் சிரிப்பலை

சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது என்று பாமக எம்எல்ஏ ஜிகே மணி கூறியதற்கு என்னால் சம்சாரம் இல்லாமல் வாழ முடியாது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதை அடுத்து சட்டசபையில் சிரிப்பொலி ஏற்பட்டது.  
 
தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இன்று விஜயகாந்த் உள்பட மறைந்த முன்னாள் எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
 
 அதன் பின்னர் சட்டசபையில் கேள்வி நேரம் நடைபெற்று வரும் நிலையில் பாமக எம்எல்ஏ ஜிகே மணி சம்சாரம் இல்லாமல் கூட வாழலாம் ஆனால் மின்சாரம் இல்லாமல் வாழ முடியாது எனவே மின்துறை, மின்தடை இன்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். 
 
ஜிகே மணியின் பேச்சுக்கு பதில் அளித்த மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறிய போது சட்டமன்றத்தில் சிரிப்பொலி ஏற்பட்டது.
 
Edited by Mahendran