வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (12:37 IST)

தூத்துக்குடி வந்தார் நிர்மலா சீதாராமன்.. ஆலோசனை கூட்டத்தில் கனிமொழி, தங்கம் தென்னரசு..!

தென் மாவட்டங்களில் அதிகனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்டிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தடைந்தார் 
 
இன்னும் சற்று நேரத்தில் தூத்துகுடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிடோர் பங்கேற்கவுள்ளனர்
 
 இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களிடம்  எடுத்துக் கூறப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்டத்தை மீட்டெடுக்க தேவையான தொகை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் பாஜக மற்றும் திமுக எதிர் எதிர் கட்சிகளாக இருந்தாலும் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க இந்த ஆலோசனை கூட்டத்தில் இருதரப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran