வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 3 செப்டம்பர் 2022 (11:54 IST)

பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் விடுமுறை: மத்திய அரசு

pregnant
பிறக்கும்போதே குழந்தை இறந்தாலும் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு விடுமுறை உண்டு என மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கான விடுமுறை விதிமுறைகள் குறித்த விளக்கத்தை அளித்துள்ளது. அந்த விளக்கத்தில் குழந்தை பிறந்தவுடன் இறக்கும் நிகழ்வுகளில் பெண் ஊழியர்களுக்கு 60 நாட்கள் சிறப்பு பிரசவ விடுமுறை உண்டு என தெரிவித்துள்ளது
 
தாயின் நீண்டகால ஆரோக்கியத்தை கருதியே இந்த விடுப்பு அளிக்கபட்டுள்ளதாகவும் விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசவ நாளில் இருந்து 28 நாட்களுக்குள் குழந்தை இறந்தால் மட்டுமே இந்த சிறப்பு விடுமுறை பெற தகுதி உண்டு என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது