செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2021 (11:16 IST)

பழைய சீருடை மற்றும் பஸ் பாஸ் போதும் – மாணவர்களுக்கு விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பு!

பழைய சீருடை மற்றும் பஸ் பாஸ் போதும் – மாணவர்களுக்கு விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் மாணவர்கள் பழைய பஸ் பாஸ் இருந்தாலே இலவசமாக பேருந்துகளில் பயணிக்கலாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பொங்கல் விடுமுறை முடிந்து வரும் 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, இதன்படி பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது

இந்நிலையில் மாணவர்கள் பழைய சீருடை மற்றும் பஸ் பாஸ் ஆகியவற்றைக் காட்டினாலே பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.