பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு

university
பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு
siva| Last Updated: வியாழன், 14 ஜனவரி 2021 (14:41 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல தேர்வுகள் ரத்து செய்யப்படும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற வேண்டிய பொறியியல் மாணவர்களுக்கான தேர்வு பிப்ரவரி 1 முதல் 15 வரை நடைபெறும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஒரு மணி நேர தேர்வாக இருக்கும் என்றும் மாணவர்கள் இந்தத் தேர்வை ஆன்லைனில் தான் எழுத வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

மேலும் எந்தெந்த தேதியில் எந்தெந்த தேர்வு நடைபெறும் என்பது குறித்த தகவலை விரைவில் அண்ணா பல்கலைக் கழகம் வெளியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் தேர்வு எழுத உள்ளனர் என்பதும் இது குறித்த சந்தேகங்கள் எதுவும் இருந்தால் அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :