1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 13 ஜனவரி 2021 (13:21 IST)

பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

பொங்கல் விடுமுறை முடிந்து வரும் 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது என்பதை பார்த்தோம் 
 
இந்த நிலையில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது, இதன்படி பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பிலும் 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
 
மேலும் மாணவர்களை பள்ளிக்கு வருமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் வீட்டிலிருந்தபடியே மாணவர்கள் படிக்க விரும்பினால் பெற்றோர் சம்மதத்துடன் படிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது
 
மேற்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள், ஆசிரியர்கள் கடைபிடித்து கொரோனாவுக்கு எதிரான போரில் ஒத்துழைப்பு தருமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது