எம் பேரு கூட போடலீனா எப்பிடீங்க...? எம்.எல்.ஏ.கருணாஸ் பேட்டி...

KARUNAS
Last Updated: திங்கள், 15 அக்டோபர் 2018 (17:16 IST)
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சென்னையிலுள்ள காவல் ஆணையரிக்கு  எதிராக அவதூரக பேசிய வழக்கில் நடிகரும் எம்.எல்.ஏவுமான கருணாஸ் போன மாதம்  வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு பின் கடந்த மாதம் 29 ஆம்தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதனையடுத்து ஜானீன் வெளிவந்த பின் சிறிது அடக்கி வாசித்த கருணாஸ் தன்னை கைது செய்த போது ஆதரவாக குரல் கொடுத்த  திமுக தலைவர் ஸ்டாலின் ,டி.டி.வி தினகரன், போன்றோரை ஏற்கனவே சந்தித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று (15ஆகஸ்ட்)தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வசனை மரியாதை நிமித்தமாக அவது இல்லத்தில் சந்தித்துப் பேசிய கருணாஸ் பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
'ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் எனது பெயர் இட பெறுவதில்லை.முக்கியமாக எந்த விழக்களிலும் அழைப்பிதல்களில் சட்டமன்றா உறுப்பினரான எனது பெயர் குறிப்பிடப்படுவதில்லை.

மேலுல் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயரும் இடம் பெறுவதில்லை.இதற்கு காரணமானவர்களை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்'. இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :