1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : ஞாயிறு, 14 அக்டோபர் 2018 (11:37 IST)

கருணாநிதி முன்னிலையிலேயே அஜித் தைரியமாக அப்படி பேசியவர்: கருணாஸ் புகழாரம்

ராஜ் சேதுபதி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷ், இந்துஜா, சாந்தினி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பில்லா பாண்டி’.


இப்படத்தில் அஜித் ரசிகராக நடித்திருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தீபாவளிக்கு ‘சர்கார்’ படத்துடன் இப்படமும் வெளியாகவுள்ளது.
 
‘பில்லா பாண்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள கலைவாணர் அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சூரி, விவேக், கருணாஸ், சீமான், தயாரிப்பாளர் தியாகராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
இவ்விழாவில் கருணாஸ் நடிகர் அஜித் குறித்து பேசியதாவது:  "அஜீத் பற்றி ஒன்று சொல்கிறேன். ஒருமுறை ஒரு சினிமா நிகழ்ச்சி நடந்தது. அதில் மேடையில் பேசும்போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி முன்னிலையில் “எங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு விருப்பம் இல்லை. அரசியல்வாதிகள் வற்புறுத்துகிறார்கள்” என்று நேருக்கு நேராக சொன்னார். அவர் பேசும்போது ஒவ்வொருவராக யோசித்து யோசித்து கை தட்டினார்கள். ஆனால் அவர் பேசும்போதே எழுந்து கை தட்டியவன் இந்த கருணாஸ் மட்டும்தான்." என்றார்.