ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2022 (22:05 IST)

முதலமைச்சரின் தலையீட்டால் பழங்குடி மாணவருக்கு வேளாண் கல்லூரியில் இடம்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலையீடு காரணமாக பழங்குடியின மாணவர்கள் வேளாண் கல்லூரியில் இடம் கிடைத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
ஈரோடு மாவட்டம் பர்கூர் என்ற பகுதியில் இட ஒதுக்கீடு குளறுபடி காரணமாக உயர் கல்விக்குச் செல்ல முடியாமல் மூன்று ஆண்டுகளாக பழங்குடி மாணவர் ஒருவர் தவித்து வந்தார் 
 
இது குறித்த தகவல் அறிந்ததும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு அந்த மாணவருக்கு உரிய இடம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார் 
 
இதனை அடுத்து முதல்வரின் நேரடி தலையீட்டால் இந்த ஆண்டு வேளாண் கல்லூரியில் சேர்ந்து அந்த மாணவர் படித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.யும்