1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 26 மார்ச் 2022 (09:14 IST)

புர்ஜ் கலீஃபா கோபுரத்தில் தமிழின் பெருமை - ஸ்டாலின் பார்வையிட்டார்!

புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

 
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடைபெறும் உலக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை துவக்கி வைப்பதற்காகவும், தமிழ்நாடு மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காகவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும் மார்ச் 26 - 28 வரை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். 
 
இந்நிலையில் துபாயில் உள்ள உலகிலேயே மிக உயரமான கட்டடமான 217 அடி உயரம் கொண்ட புர்ஜ் கலீஃபா கோபுரத்தின் மீது ஒளிபரப்பப்பட்ட தமிழ்நாடு பற்றிய காட்சிப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, செம்மொழி, தமிழ்நாட்டின் சமீபத்திய அகழ்வாராய்ச்சிகள் பற்றி காட்சிப்படம் ஒளிபரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.