செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 மார்ச் 2022 (09:24 IST)

எவ்வளவு உயர்ந்தாலும் தமிழையும், தமிழ்நாட்டையும் மறந்து விடாதீர்கள்! – மு.க.ஸ்டாலின்!

முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள தமிழர்களிடம் தமிழை விட்டுவிட வேண்டாம் என பேசியுள்ளார்.

தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ளார். அங்கு நடைபெற்று வரும் எக்ஸ்போவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் வாழ் தமிழர்களிடம் பேசினார்.

அப்போது அவர் “உங்கள் எல்லாரையும் நான் பார்க்கும்போது அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கல்வியில், வேலைவாய்ப்பில், அறிவில், ஆற்றலில் என அனைத்திலும் தமிழர்கள் மேன்மை அடைந்தவர்களாக இருக்க வேண்டும் என்றுதான் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞரும் விரும்பினார்கள். அவர்கள் விருப்பம் நிறைவேறியதன் அடையாளமாக நீங்கள் இருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் “பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்று சொன்னதையே இன்று நானும் சொல்றேன். இந்த நாட்டின் குடிமக்களாக நாட்டுப்பற்றுடன் வாழுங்கள். அதே நேரத்தில் நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள்” என்று பேசியுள்ளார்.