திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (12:13 IST)

பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் அட்டை எப்போது? அமைச்சர் சிவசங்கர்

students
பள்ளி மாணவ மாணவியர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்ட் அட்டை வழங்குவது எப்போது என்பது குறித்த தகவலை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர் தெரிவித்துள்ளார் 
 
பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்ட் விரைவில் வழங்கப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார் 
 
ஆனால் அதே நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவ மாணவிகள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார் 
 
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அவர்களது இருப்பிடத்திலிருந்து பள்ளிகள் இருப்பிடம் வரை பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது