இந்தியாவில் 2 குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி வைரஸ் பரவியது: ஐ.சி.எம்.ஆர் உறுதி..!
இந்தியாவில் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு எச்.எம்.பி.வி வைரஸ் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இன்னொரு குழந்தைக்கும் பரவி இருப்பதாக ஐ சி எம் ஆர் உறுதி செய்துள்ளது.
சீனாவில் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஏராளமான ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், எச்.எம்.பி.வி என்ற வைரஸ் பரவி வருவதாக கூறப்பட்டது. நுரையீரல் தொற்று பாதிப்புடன், மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் அனுமதிக்கப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் முதல் முறையாக பெங்களூரைச் சேர்ந்த மூன்று மாத குழந்தைக்கு இந்த வைரஸ் பரவிய நிலையில், தற்போது 8 மாத குழந்தை ஒன்றுக்கும் எச்.எம்.பி.வி பரவி உள்ளதாக ஐ சி எம் ஆர் உறுதி செய்துள்ளது.
இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளின் உடல் நிலை தற்போது சீராக இருப்பதாகவும், வெளிநாட்டு பயணம் எதுவும் மேற்கொள்ளாத நிலையில் இந்த இரண்டு குழந்தைகளுக்கு எப்படி இந்த தொற்று பரவியது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், எச்.எம்.பி.வி வைரஸ் தொற்றால் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Edited by Mahendran