செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 ஜூன் 2022 (12:22 IST)

ஜீன் 13ல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ்!

anbil
ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வுகளும், 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தன என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது
 
ஆனால் ஒரு சில காரணங்களால் பள்ளிகள் திறப்பதில் தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் கசிந்து வரும் நிலையில் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்
 
தமிழகத்தில் ஜூன் 13ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளார்