வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 4 ஜூன் 2022 (12:31 IST)

தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

தமிழகத்தில்1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் மீண்டும் துவங்கப்படும் என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

அதில், 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு வரும் 13 ஆம் தேதியும், 20 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும் 27 ஆம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், இன்னும்10 தினங்களில் மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், கொரோனா, குரங்கம்மை, தக்காளி காய்ச்சல், இன்னும் பல காய்ச்சல்கள் பரவி வருவதால், மாணவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என  தெரிவித்துள்ளார்.