திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 ஜனவரி 2025 (13:05 IST)

சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஏன் வெளியேறினார்? சபாநாயகர் அப்பாவு விளக்கம்..!

தமிழக சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் இன்று வெளியேற நிலையில் அவர் வாசிக்க வேண்டிய முறை உரையை சபாநாயகர் அப்பாவும் வாசித்தார் இந்த நிலையில் ஆளுநர் சபையிலிருந்து வெளியேறியது ஏன் என்பது குறித்து செய்தியாளர்களிடம் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார் அவர் கூறியதாவது
 
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு சட்டப்பேரவைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு பேட்ச் அணிந்து வந்திருந்தார்கள். அதிமுகவினர் கையில் பாதைகளுடன் வந்திருந்தார்கள். ஆளுநர் எழும்பும்போதுதான் மற்ற கட்சியினர் பதாகைகளைக் காட்டினார். பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் அவருக்கு எதிராகக் காட்டினார்களா எனத் தெரியவில்லை. அவர்களுக்கு பேசவும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர்கள் யாருக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று தெரியவில்லை. 
 
ஆளுநர் உரைக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் ஒரு கலவர நோக்கத்துடன் செய்ததால் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்களை வெளியேற்றினோம். ஆளுநருக்கு மதிப்பளித்துதான் அவர்களை வெளியேற்றினோம். 
 
அரசமைப்பு விதி 176 (1) இன்படி, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆளுநர் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இவ்வாறு செய்திருக்கிறார். இதற்கு அவையில் தீர்மானம் நிறைவேற்றி கண்டனம் செய்திருக்கிறோம்
 
இதே ஆளுநர் இருந்தால் அடுத்த ஆண்டும் இதே மாதிரிதான் நடைபெறும் என்று கூறிய அப்பாவு, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வருகிற ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார். 

Edited by Mahendran